உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'யுனஸ்கோ காந்தி' விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படம்

'யுனஸ்கோ காந்தி' விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படம்

'பாஸ்வேர்ட்' என்ற படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கண்ணன் இயக்கி உள்ள புதிய படம் 'ஸ்குரோல்'. அரவிந்த் சுந்தர் மற்றும் காவ்யா அனில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேகா ராஜன், 'கொட்டுக்காளி' முருகன் கோவிந்தசாமி, சிபி, பொற்கொடி, சுரேந்தர் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜோகன் மற்றும் தினகர் ஆகியோர் இசை அமைத்து உள்ளனர். இந்த படம் கோவாவில் நடைபெறும் 57வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. அதோடு 'யுனஸ்கோ - காந்தி' விருதிற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் கண்ணன் கூறியதாவது: 'ஸ்கிரீன் மூவி வகையைச் சார்ந்த இந்த திரைப்படம், கதை முழுக்க நாயகனின் செல்போன் திரை வழியே சொல்லப்படுகின்ற வித்தியாசமான முயற்சியாக உருவாகி இருக்கிறது. ஸ்மார்ட் போன் அடிக்சன் என்பதை மையப்படுத்தி இதன் திரைக்கதை அமைந்துள்ளது. செல்போனுக்கு ஒருவர் அடிமையாவதன் காரணங்களை இந்த படம் விளக்குகிறது.

தொழில்நுட்பத்தின் பிடியில் சிக்கியிருக்கிறதா மனித இனம்? அல்லது மனிதனின் கோர மனதின் கருவியாகத் தொழில்நுட்பம் மாறியிருக்கிறதா? இந்த இரு கேள்விகளுக்கும் இடையே, விறுவிறுப்பான ஒரு திரைக்கதையாக விரிகிறது இந்தப் படம். மிகக் குறைந்த நபர்களைக் கொண்டு குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது, என்றாலும் அதன் கதைக்களமும், திரைக்கதையும் பெரும் படங்களுக்கு மத்தியில் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் அதற்கான அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளது. அடுத்த ஆண்டு தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !