உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரோட்டர்டாம் திரைப்பட விழாவுக்கு 'டோரதி' தேர்வு

ரோட்டர்டாம் திரைப்பட விழாவுக்கு 'டோரதி' தேர்வு

நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ரோட்டர்டாமில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. 1972ம் ஆண்டு முதல் இது நடந்து வருகிறது. கேன்ஸ் மற்றும் வெனிஸ் திரைப்பட விழாவிற்கு நிகராக இந்த விழாவும் மதிக்கப்படுகிறது. 56வது சர்வதேச திரைப்பட விழா வருகிற ஜனவரி 28ம் தேதி முதல் பிப்ரவரி 7ம் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் 'பியூச்சர் லைம் லைட்' என்ற பிரிவின் கீழ் திரையிட தமிழ் படமான 'டோரதி' தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அவரது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இளையராஜா இசையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான 'டோரதி' படம் செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் முதன்மை கதாபாத்தித்தில் நடித்திருந்தனர்.

மூன்றாம் பாலினத்தவர் குறித்தும் சமூகம் அவர்களை எதிர்கொள்ளும் விதம் குறித்தும் 1990களின் மதுரை பின்னணியில் இந்தப் படம் பேசியது. விவாதத்தையும் பரவலான வரவேற்பையும் பெற்றது. அதேபோல் ஓடிடி தளத்திலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இப்படம் ஏற்கெனவே ரிலீசுக்கு முன்பே டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !