தனுஷின் 'ஓம்' படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியிட்ட ஸ்ரீலீலா!
தனுஷ் நடித்துள்ள 'ஓம்' படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தில் மம்முட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக இப்படத்தில் சாய்பல்லவி இன்னொரு ஹீரோ போன்று ஆக்சன் வேடத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்த விவரங்களை ஸ்ரீலீலா பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், ''இப்படத்தில் திருவண்ணாமலையைச் சேர்ந்த இளம் வயதிலேயே திருமணமான ரோஜா என்ற பெண்ணாக நடித்துள்ளேன். தனது கணவருடன் இன்னும் கொஞ்ச நேரம் செலவிட வேண்டும் என்பதே நான் நடித்துள்ள ரோஜாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆசையாக இருக்கிறது. கேட்பதற்கு இது மிகவும் சாதாரண விஷயமாகத் தோன்றலாம், ஆனால் சில நேரங்களில் அதுவே மிக முக்கியமானதாக இருக்கும்'' என்று கூறியுள்ளார்.
மேலும், ''எனது மவுனங்களுக்கு இடையில்தான் நான் ரோஜாவைக் கண்டறிந்தேன் என்று நினைக்கிறேன். அந்த கதாபாத்திரத்துடன் நான் அதிக நேரம் செலவிடச் செலவிட, அவள் தனது அன்றாட வேலைகளை வழக்கம்போலச் செய்து கொண்டிருந்தாலும், அவளது உணர்வுகள் எந்த அளவிற்கு அவளுக்குள்ளேயே தங்கிவிடுகின்றன என்பதை நான் புரிந்துகொண்டேன்'' என்றும் தெரிவித்துள்ளார் ஸ்ரீ லீலா.