நவாசுதீன் சித்திக்குடன் வேலை செய்வது நரகம் போன்றது : நடிகை தியா மிர்சா காட்டம்
பாலிவுட் குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகரான நவாசுதீன் சித்திக் குறித்து பாலிவுட் நடிகை தியா மிர்சா தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு காட்டமான விமர்சனப் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நவாசுதீன் சித்திக்குடன் வேலை செய்வது ஒரு நரகம் போன்றது, எப்படிப் பேசுவது என்ற நாகரிகம் கூட அவரிடம் இல்லை, திமிர் அந்த லெவலில் இருக்கிறது, முற்றிலும் ஒரு மோசமான குணம் கொண்டவர்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதன் பின்னர் அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவை நீக்கிவிட்டாலும் இன்ஸ்டாகிராமில் அவரது பதிவு அப்படியே இருக்கிறது. இவர் திடீரென இப்படி கூறுவதற்கு என்ன காரணம் எனப் பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். அதே சமயம் இவர்கள் இருவரும் சேர்ந்து தற்போது 'டாக்டர் இம்ரான் ஹாசன் என்கிற வெப்சீரிஸில் இணைந்து நடித்துள்ளனர்,.
அதனைப் புரமோட் பண்ணுவதற்காகத்தான் இது போன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க கடுமையான பதிவு ஒன்றை தியா மிர்சா வெளியிட்டுள்ளார் என்றும், பாலிவுட்டில் இப்படித் திரைப்படங்கள் அல்லது வெப்சீரிஸ்கள் வெளியீட்டுக்கு முன்பாகப் பலரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டு கவனத்தை ஈர்ப்பது வழக்கமான ஒன்றுதான் என்றும் பாலிவுட் சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.