உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தாய்மைப் பொறுப்புகள் குறித்த புகைப்படங்களை பகிர்ந்த பிரியங்கா சோப்ரா!

தாய்மைப் பொறுப்புகள் குறித்த புகைப்படங்களை பகிர்ந்த பிரியங்கா சோப்ரா!


நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் தனது பரபரப்பான திரைப்பணிகளுக்கும், ஒரு தாயாக தனது கடமைகளுக்கும் இடையே சிறப்பாக சமநிலையைப் பேணி வருகிறார். 40 வயதைக் கடந்த இவர், எஸ்.எஸ்.ராஜமவுலியின் பான்-இந்தியா படமான 'வாரணாசி' முதல் தனது அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடர் மற்றும் ஹாலிவுட் படங்கள் வரை பல்வேறு படைப்புகளைக் கைவசம் வைத்துள்ளார்.

தனது ஓய்வில்லாத பணிச்சுமைக்கு மத்தியிலும், தாய்மைக்கே பிரியங்கா சோப்ரா எப்போதும் முன்னுரிமை அளிக்கிறார். தனது மகளைப் பராமரிப்பதில் மிகுந்த அக்கறை கொண்ட அவர், படப்பிடிப்புத் தளங்களுக்கும் வெளிப்புறப் படப்பிடிப்புகளுக்கும் மகளை அடிக்கடி உடன் அழைத்துச் செல்கிறார்.

இந்நிலையில், தனது பரபரப்பான பணிச் சூழல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் துளிகளைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள தொடர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார். அந்தப் புகைப்படங்களில், அவர் வயர் இயர்போன் மூலம் இசையை ரசிப்பதும், மற்றொரு படத்தில் படப்பிடிப்புத் தளத்தில் அவரது மகள் ஸ்கிரிப்ட் படிப்பதும் இடம்பெற்றுள்ளது. மேலும், படப்பிடிப்பு இடைவேளையின்போது பிரியங்கா சோப்ரா, தனது மகளை அன்போடு அணைத்திருக்கும் நெகிழ்ச்சியான தருணங்களும் அதில் பதிவாகியுள்ளன. இந்த புகைப்படத் தொகுப்பில் கடற்கரை உலா, விடுமுறைக் கொண்டாட்டங்கள் மற்றும் பிகினி செல்பி உள்ளிட்ட அவரது ஓய்வு நேரக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள பிரியங்கா சோப்ரா, சமீபகாலமாக, வேலைப்பளுவுக்கு மத்தியில், ஆனால் ஒரு கனவு இடத்தில் #பட்டர்பிளை சவுண்ட் ஆன்- எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !