உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ''அரசியல் சென்ற விஜய் மாதிரி இல்லாமல் தொடர்ந்து நடியுங்கள்'': தனுஷூக்கு சாய்பல்லவி கோரிக்கை

''அரசியல் சென்ற விஜய் மாதிரி இல்லாமல் தொடர்ந்து நடியுங்கள்'': தனுஷூக்கு சாய்பல்லவி கோரிக்கை


'அமரன்' படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்முட்டி, சாய்பல்லவி, ஸ்ரீலீலா நடித்துள்ள படம் 'ஓம்'. வரும் நவ.,20ல் ரிலீசாக உள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதன் டிரைலர் வெளியீட்டு விழாவில் சாய்பல்லவி பேசியதாவது:

இந்த நிகழ்ச்சிக்கு வரும்போது, எங்கும் கொடிகளாக இருந்ததை பார்த்ததும் இது ஒரு அரசியல் நிகழ்வு போன்று இருந்தது. நீங்கள் (தனுஷ்) என்ன செய்தாலும் சிறந்ததாக அமைய வாழ்த்துகள். உங்களுக்கு சிறந்ததே நடக்கும். நடிகர் விஜய் அரசியலுக்கு சென்றதால் இப்போது நடிப்பதில்லை. ஆனால், தனுஷ் தொடர்ந்து நடிப்பீர்கள் என நம்புகிறேன். ஏனென்றால் அவரை போல ரசிகர்களிடம் யதார்த்தமாக நடிக்கும் நபர். அதனால் என்ன முடிவெடுத்தாலும் ப்ளீஸ் தொடர்ந்து நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இல்லையென்றால் ஏராளமானோர் உங்களை மிஸ் செய்வார்கள். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !