உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தந்தை கிருஷ்ணாவின் நினைவு நாளில் மகேஷ் பாபு உருக்கம்- சிறப்புப் புகைப்படத்தைப் பகிர்ந்தார்!

தந்தை கிருஷ்ணாவின் நினைவு நாளில் மகேஷ் பாபு உருக்கம்- சிறப்புப் புகைப்படத்தைப் பகிர்ந்தார்!


தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, தனது தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணாவின் 4-வது நினைவு நாளையொட்டி, அவரை நினைவுகூர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குழந்தையாக இருந்த தன்னைத் தனது தந்தை கையில் ஏந்தியபடி இருக்கும் பழைய கருப்பு-வெள்ளைப் புகைப்படம் ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்திற்கு, என்றென்றும் என் சூப்பர் ஸ்டார் என்று சுருக்கமாகவும், ஆழமான அர்த்தத்துடனும் தலைப்பிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படத்தைப் பற்றிய ஒரு சுவாரசியமான தகவலும் உள்ளது. கிருஷ்ணா கதாநாயகனாக, நடித்த போராட்டம் என்ற படத்தில், மகேஷ் பாபு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இதுவாகும். ரசிகர்கள் இந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, மறைந்த நடிகரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

தற்போது ராஜமவுலி இயக்கி வரும் 'வாரணாசி' படத்தில் நடித்து வருகிறார் மகேஷ் பாபு. அவருடன் பிரியாங்கா சோப்ரா, பிரித்விராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் 2027ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி திரைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !