உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷின் 'ஓம்' படத்தில் எதிர்மறை வேடத்தில் நடிக்கிறாரா சாய் பல்லவி?

தனுஷின் 'ஓம்' படத்தில் எதிர்மறை வேடத்தில் நடிக்கிறாரா சாய் பல்லவி?


'ராமாயணா: பாகம் -1' படத்தில் சீதையாக நடித்ததற்காகக் கடுமையான விமர்சனங்களையும், கேலிகளையும் சந்தித்தார் சாய்பல்லவி. ஆனால் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அந்த எதிர்மறை விமர்சனங்கள் அனைத்தும் மறைந்து விட்டன. தற்போது அவருக்குப் பரவலான பாராட்டுகள் குவிந்து வருவதுடன், வட இந்தியாவிலும் பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ளார்.

தமிழகத்தில் இரண்டாவது வார இறுதியிலும் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் ராமாயணா படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக தனுஷின் 'ஓம்' படத்தில், நித்யா ரெட்டி என்ற காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் சாய் பல்லவி.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு செய்தியில், இப்படத்தில் சாய் பல்லவி காவல்துறை அதிகாரியாக நடித்தாலும், கதாநாயகனான தனுஷூக்கு எதிரான அணியில் இருப்பார் என்று கூறப்படுகிறது. அவர் நேர்மையான அதிகாரியாக இல்லாமல், எதிர்மறைத் தன்மையுள்ள கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, 'மாரி-2' படத்தில் 'ரவுடி பேபி' பாடலில் தனுஷூக்கு ஜோடியாக நடித்திருந்த சாய் பல்லவி, இந்த முறை அவருக்குப் பரம எதிரியாக நடித்துள்ளார். சீதை போன்ற தெய்வீகக் கதாபாத்திரத்தில் நடித்த பிறகு, இப்படியொரு எதிர்மறையான கதாபாத்திரத்தில் சாய் பல்லவியை ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !