ஹிந்தியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் 'பாக்கெட் நாவல்'
விமர்சன ரீதியாகப் பெரும் பாராட்டைப் பெற்ற 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் இணைந்த விஜய் சேதுபதி, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா கூட்டணி, தற்போது 'பாக்கெட் நாவல்' என்ற படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது. இவர்களது முந்தைய கூட்டணி, வழக்கத்திற்கு மாறான கதை சொல்லல் மற்றும் நடிப்பிற்காகப் பரவலான பாராட்டைப் பெற்றதால், இவர்கள் மீண்டும் இணைந்திருப்பது சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரசியமான விஷயம் என்னவென்றால், நெட்பிளிக்ஸில் தற்போது டிரெண்டிங்கில் உள்ள விஜய்சேதுபதியின் 'பத்தா' படத்திற்கு ஹிந்தி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால், 'பாக்கெட் நாவல்' படத்தை ஹிந்தியில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதனால் இப்படம் பரந்த அளவிலான பார்வையாளர்களிடம் போய் சேரும் என்று தெரிகிறது. இப்படம் பொங்கலையொட்டி வருகிற ஜனவரி 14ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் சேதுபதியுடன் மாளவிகா மோகனன், ராஜ் பி. ஷெட்டி, கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து, தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.