கதறி அழுத தயாரிப்பாளர் : என்ன காரணம்?
எட்டு தோட்டாக்கள் வெற்றி நடிப்பில், தீரன் அருண்குமார் இயக்கத்தில் இன்று வெளியாகி உள்ள படம் ‛பிளாக் கோல்ட்'. மூர்த்தி என்பவர் தயாரித்து, படத்தில் கெட்ட போலீஸாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிளாக் கோல்டு எனப்படும் தலைமுடி வியாபாரம், இரண்டு குழு மோதல், அப்பா மகன் பாசம் பின்னணியில் படம் உருவாகி உள்ளது. அப்பாவாக லிவிங்ஸ்டன் நடித்துள்ளார்.
சென்னையில் படத்தின் பிரஸ் ஷோ முடிந்ததும் படக்குழுவினர் மீடியாவை சந்தித்தனர். அப்போது கதறி அழுதார் தயாரிப்பாளர் மூர்த்தி. அவர் அழுகை பலரை அதிர்ச்சி அடைய வைத்தது. மிகவும் கஷ்டப்பட்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக மீடியா முன்னிலையில் கதறி அழுதார்.
மேலும் அவர் கூறுகையில், ‛‛முதல் படத்தை தயாரித்துள்ளேன், நான் சேமித்து வைத்த ஒட்டுமொத்த பணத்தையும் இதில் முதலீடு செய்துள்ளதாகவும் மக்களை மட்டுமே நம்பி இருக்கிறேன் எனவும் கூறி கதறி அழுதார். அவரை அருகில் இருந்தவர்கள் ஆறுதல் படுத்தினார்கள். பல ஆண்டுகால சினிமா மீதான காதலால் தனது சேமிப்புகள் அனைத்தையும் இப்படத்தில் முதலீடு செய்ததாகவும், பட்ஜெட் திட்டமிட்டதை விட அதிகமானதால் பெரும் கடன் சுமையில் சிக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
படத்தை முடித்துவிட்டாலும், அதனைத் திரையரங்குகளில் வெளியிடுவதற்கும், விளம்பரப்படுத்துவதற்கும் பணமின்றித் தவித்ததையும், சினிமா துறையில் சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர்கள் படும் அவதிகளையும் அவர் வேதனையுடன் பகிர்ந்து கொண்டார். இதனால் பக்கத்தில் இருந்த ஹீரோ வெற்றி தவித்தார். எதிர்பார்த்த அளவு பிஸினஸ், தியேட்டர் கிடைக்கத்தால் அவர் அழ, ஹீரோ தர்ம சங்கடத்திற்கு ஆளானார்.