பிரித்விராஜ்-கரீனா கபூரின் தாயரா ஓடிடியில் வெளியானது
ஹிந்தியில் பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் கரீனா கபூர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த படம் தாயரா. மேக்னா குல்சார் இயக்கியுள்ளார். 50 கோடி பட்ஜெட்டில் தயாராகி கடந்த செப்டம்பர் 18ல் வெளியான இப்படம் 8 கோடி மட்டுமே வசூலித்தது. இந்நிலையில் இப்படம் நவம்பர் 13ம் தேதியான நெட்பிளிக்ஸ் டிஜிட்டல் தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறாத இப்படத்திற்கு, தற்போது ஓடிடி தளத்தில் இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தியாவில் நடந்த உண்மைச் சம்பவங்களான போலீஸ் என்கவுன்டர் சர்ச்சைகளை, குறிப்பாக 2019 ஐதராபாத் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல சம்பவங்களின் தாக்கத்தில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் மேக்னா குல்சார் தெரிவித்துள்ளார். தற்போது இப்படம் ஹிந்தி மற்றும் மலையாள மொழிகளில் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. ஜங்லி பிக்சர்ஸ், மற்றும் பென் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இப்படத்தைத் தயாரித்துள்ளன.