ரஜினியின் ‛ஜெயிலர் 2' ரூ.900 கோடியை தொட்டதா?
தீபாவளிக்கு முடிந்தபின்னரும் பல தியேட்டர்களில் ஜெயிலர் 2 ஓடிக்கொண்டு இருக்கிறது. ஓடிடியில் படம் வந்தாலும் இன்னும் தியேட்டரில் போய் படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறையவில்லை. இந்நிலையில், ஜெயிலர்2 படத்தின் அதிகாரப்பூர்வ லேட்டஸ்ட் வசூல் இன்னமும் அறிவிக்கபடவில்லை. சரி, படத்தின் வசூல் என்ன என்று விசாரித்தால் ஒரு தரப்பினர் ரூ.900 கோடியை தொட்டுவிட்டதாக சொல்கிறார்கள். இன்னொரு தரப்பினர் அந்த நிலை வரவில்லை என சொல்கிறார்கள். இந்த மாத இறுதிக்குள் 900 கோடி சாத்தியம் என வேறு ஒரு தரப்பு சொல்கிறது.
எது எப்படியோ 100 ஆண்டுக்கும் அதிகமான வரலாறு உள்ள தமிழ் சினிமாவில் 900 கோடியை தொட்ட முதல் சினிமா என்ற பெருமையை ஜெயிலர் 2 பெறப்போகிறது. விரைவில் அதற்கான கொண்டாட்டங்கள் இருக்கலாம். ஜெயிலர் 2 படத்தில் நடித்த பல நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ரஜினியை நேரில் சந்தித்து பேச ஆசைப்படுகிறார்கள். விரைவில் அவர்கள் ஆசையை ரஜினிகாந்த் நிறைவேற்றப்போகிறார் என்றும் தகவல்.
ஜெயிலர்2 படத்தின் சாதனையை ரஜினியே முறியடிப்பார். ரெட் ஜெயன்ட் தயாரிப்பில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படம் அதை செய்யும், நெல்சன் இயக்கும் அந்த படம் கண்டிப்பாக ஆயிரம் கோடியை தொடும் என்று இப்போதே ஒரு சிலர் பேச ஆரம்பித்துவிட்டனர்.