உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆஸ்கர் ரேஸில் களமிறங்கிய ‛ராமாயணா'

ஆஸ்கர் ரேஸில் களமிறங்கிய ‛ராமாயணா'

பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்து வரும் ராமாயணா திரைப்படத்தை, உலக புகழ்பெற்ற ஆஸ்கர் விருது பரிசீலனைக்காக, படக்குழுவினர் அனுப்பி வைத்துள்ளனர். இதன் மூலம் உலக அரங்கில் விருது வேட்டைக்கு இத்திரைப்படம் தயாராகியுள்ளது.

​நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணா படம் இரு பாகங்களாக தயாராகி முதல் பாகம் நவ., 5ம் தேதி வெளியாகி உள்ளது. இந்தியா தாண்டி உலகளவிலும் இப்படம் வெளியாகி உள்ளது. ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யஷ் நடித்துள்ள இப்படம், வெளியான 6 நாட்களில் உலகளவில் 800 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளது

99வது ஆஸ்கர் விருதுக்கான 'சிறந்த சர்வதேச திரைப்படம்' பிரிவில் போட்டியிட, இந்தியாவின் சார்பில் மராத்தி திரைப்படமான 'கோந்தல்' அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு நாட்டின் அதிகாரப்பூர்வ பரிந்துரை தவிர்த்து, பிற படங்களும் நேரடியாக ஆஸ்கர் விருதுகளுக்கு விண்ணப்பிக்க விதிமுறை உள்ளது. ​அதன் அடிப்படையில் ராமாயணா படம் ஆஸ்கர் பொதுப் பிரிவுகளுக்கான போட்டியில் களமிறங்கியுள்ளனர்.

இந்திய இதிகாசத்தை உலகளவில் கொண்டு சென்று, ஆஸ்கர் மேடையில் இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்த்து முத்திரை பதிக்க, ராமாயணா திரைப்படம் தயாராகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !