உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காதலரை மணந்தார் நடிகை பிரியா பவானி சங்கர்

காதலரை மணந்தார் நடிகை பிரியா பவானி சங்கர்

நடிகை பிரியா பவானி சங்கர் தனது நீண்டநாள் காதலர் ராஜ்வேலை திருமணம் செய்து கொண்டார்.

செய்தி வாசிப்பாளராக மீடியாவுக்குள் நுழைந்து அடுத்து டிவி சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். 'மேயாத மான்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து “கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், திருச்சிற்றம்பலம், பத்து தல, இந்தியன் 2, டிமான்ட்டி காலனி 2” உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் இந்த வருடம் அவர் நடித்து வெளிவந்த 'இருமுடி' படம் பெரும் வெற்றி பெற்று 250 கோடி வசூலைப் பெற்றது.

பிரியா பவானி சங்கர் அவருடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த ராஜ்வேல் என்பவரை பல வருடங்களாகக் காதலித்து வந்தார். நேற்று திருமண நிச்சயதார்த்தம் போன்ற போட்டோக்களை பிரியா பவானி சங்கர் பதிவிட்டு இருந்தார். விரைவில் அவர் திருமணம் அறிவிப்பை வெளியிடுவார் என்று பார்த்தால் சத்தமின்றி இன்று(நவ., 11) ராஜ்வேலை திருமணமே செய்துவிட்டார். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்க இந்த திருமணம் நடந்துள்ளது. திருமண தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளன. மணமக்களுக்கு ரசிகர்கள், திரையுலகினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !