திருமணத்திற்குத் தயாராகிறாரா பிரியா பவானி சங்கர்?
தமிழ், தெலுங்கில் கதாநாயகியாக நடித்து வருபவர் பிரியா பவானி சங்கர். செய்தித் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மீடியாவுக்குள் நுழைந்தவர், அடுத்து டிவி சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். அங்கிருந்து அப்படியே 'மேயாத மான்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து, “கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், திருச்சிற்றம்பலம், பத்து தல, இந்தியன் 2, டிமான்டி காலனி 2” உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் இந்த வருடம் அவர் நடித்து வெளிவந்த 'இருமுடி' படம் பெரும் வெற்றி பெற்று 250 கோடி வசூலைப் பெற்றது.
பிரியா பவானி சங்கர் அவருடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த ராஜ்வேல் என்பவரை பல வருடங்களாகக் காதலித்து வந்தார். அவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயம் நடந்துள்ளதாகத் தெரிகிறது.
பிரியா அவரது இன்ஸ்டா தளத்தில் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றைப் பகிர்ந்துள்ளார். இருவரது கழுத்திலும் மல்லிகைப் பூ மாலை போல போடப்பட்டுள்ளது. பின்னணியில் 'மங்கல இசை, நூறாண்டு காலம் வாழ்க, கண்ணாலம்…கண்ணாலம்….' ஆகிய பாடல்கள் ஒலிக்கின்றன.
விரைவில் கல்யாணம் என்பது மட்டும் இந்தப் புகைப்படங்களைப் பார்க்கும் போது தெரிகிறது.