உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கடைசி நேரத்தில் கைநழுவி போன படங்கள்: அபிராமி வருத்தம்

கடைசி நேரத்தில் கைநழுவி போன படங்கள்: அபிராமி வருத்தம்


எம்.எம். ஸ்டூடியோஸ் சார்பில் எம். மூர்த்தி தயாரிக்கும் படம் 'பிளாக் கோல்ட்' தீரன் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள படம். இதில் நாயகியாக அபிராமி வெங்கடாசலம் நடித்துள்ளார். முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார்.

இதுகுறித்து அபிராமி கூறி இருப்பதாவது: ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பது மிகவும் சவாலான விஷயம். முடிந்தவரை அதை சரியாக செய்திருக்கிறேன். இந்தப் படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது, வெற்றி நடிக்கிறார் என்று தெரிந்ததும் கதை நிச்சயம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இயக்குநர் தீரன் கதையை மிகவும் தெளிவாகவும் வித்தியாசமாகவும் விளக்கினார்.

முன்பு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் உறுதியாகும் என்று எதிர்பார்த்தும், கடைசி நேரத்தில் கைநழுவிய அனுபவங்கள் எனக்கு இருந்திருக்கின்றன. அதனால் இந்தப் படத்திலும் எனது கதாபாத்திரம் உறுதியாக இருக்கிறதா என்று பலமுறை இயக்குநரிடம் கேட்டேன். ஆனால் அவர் என் மீது முழு நம்பிக்கையுடன் இருந்தார். இந்தக் கதாபாத்திரத்திற்கு அபிராமிதான் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளரும் இயக்குநரும் உறுதியாக முடிவெடுத்து என்னை அழைத்தது ஒரு நடிகையாக எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்தது.

அடுத்த படம் எப்போது, ஏன் புதிய படங்களில் நடிக்கவில்லை என்ற கேள்விகளை நிறைய எதிர்கொண்டேன். இந்த படத்துக்கு பிறகு அந்த கேள்விகளுக்கு இடம் இருக்காது என்று நம்புகிறேன், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !