இணையத்தில் கசிந்த 'ராமாயணா'
இந்திய சினிமா குறித்து உலகமே திரும்பிப் பார்க்க வைத்த படம் 'ராமாயணா' நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள இந்த படம் 500 கோடியை தாண்டி வசூலித்து வருகிறது மொத்தமாக 1500 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் முழு படமும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படத்தை திரையரங்குகளில் சட்டவிரோதமாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்வோர் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்துத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வணிகசார் அறிவுசார் சொத்துரிமை வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் கடந்த நவம்பர் 2 மற்றும் நவம்பர் 6 ஆகிய தேதிகளில் பிறப்பித்த உத்தரவுகளின்படி, 'ராமாயணா' திரைப்படத்தையோ அல்லது அதன் எந்தவொரு பகுதியையோ அனுமதியின்றி பதிவு செய்வதோ, பதிவேற்றம் செய்வதோ அல்லது பிறருக்குப் பகிர்வதோ முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
அனுமதியின்றித் திரைப்படக் காட்சிகளைப் பகிர்வது காப்புரிமைச் சட்டம் 1957, திரையரங்கச் சட்டம் 1952, பாரதிய நியாய சன்ஹிதா 2023, தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 ஆகியவற்றின் கீழ் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படக்கூடிய குற்றவியல் செயலாகும். திரையரங்குகளில் படத்தைப் பதிவு செய்வதைத் தவிர்க்குமாறும், ஏற்கனவே இணையத்தில் பதிவிடப்பட்ட திருட்டுத்தனமான காணொளிகளை உடனடியாக நீக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . இந்த உத்தரவை மீறிச் செயல்படுபவர்கள் மீது எந்தவித முன்அறிவிப்புமின்றி சிவில், குற்றவியல் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, இணையத் தளங்கள் மூலம் காவல்துறைக்குத் தெரிவிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.