5வது நாளில் அதிக வசூல் : ரூ.660 கோடி வசூலைக் கடந்த 'ராமாயணா'
நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் நவம்பர் 5ம் தேதி வெளியான ஹிந்திப் படம் 'ராமாயணா'. பான் இந்தியா படமாக மற்ற மொழிகளிலும் டப்பிங் என்று சொல்ல முடியாத படமாக வெளியாகி உள்ளது.
இப்படத்தின் 5வது நாளான நேற்று மட்டும் வசூல் 120 கோடியைக் கடந்துள்ளது. அதன் காரணமாக இப்படம் 5 நாட்கள் முடிய மொத்தமாக 660 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் மட்டும் 420 கோடிக்கு அதிகமாவும், வெளிநாடுகளில் 230 கோடிக்கு அதிகமாகவும் வசூலித்துள்ளது என்கிறார்கள்.
இன்று கர்நாடகாவில் விடுமுறை நாள் என்பதால் அங்கு இன்றும் வசூல் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கன்னட நடிகர் யஷ் இப்படத்தில் ராவணன் ஆக நடித்துள்ளதால் தென்னிந்திய மாநிலங்களில் கர்நாடகா தான் அதிக வசூலைப் பெற்று வருகிறது.
இப்படம் 1000 கோடி வசூலை நிச்சயம் கடக்கும் என்ற எதிர்பார்ப்பு பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் உள்ளது.