உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கிங் 100': மஹாந்தி ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் அசத்தும் தபு!

'கிங் 100': மஹாந்தி ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் அசத்தும் தபு!


நாகார்ஜூனாவின் 100வது படமான 'கிங் 100' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியானது. இந்த வீடியோ முழுக்க முழுக்க நடிகை தபுவை மையமாகக் கொண்டுள்ளது. சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இவர் நாகார்ஜூனாவுடன் இப்படத்தில் அவர் நடித்துளளார். முன்னதாக அவருக்கு ஜோடியாக நடித்த தபு, இப்படத்தில் அவருக்கு எதிராக வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அரசியல்வாதியான மஹாந்தி ஜான்சி ராணி என்ற சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரத்தில் தபு அறிமுகப்படுத்தப்படுகிறார். அதிர்ஷ்டத்தை விட கடின உழைப்பின் மூலமே வெற்றி பெற வேண்டும் என்ற கொள்கை கொண்ட அதிகாரமிக்க பெண்ணாக அவர் காட்டப்படுகிறார். நாகார்ஜூனாவின் கதாபாத்திரத்தை அவர் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பதை திரையில் காண்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

தபுவின் பிறந்தநாளான இன்று இந்த வீடியோவை வெளியிட்டது ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்தாக அமைந்துள்ளது. படத்தின் பின்னணி இசையும் காட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளன.

ரா.கார்த்திக் இயக்கும் 'கிங் 100' படத்தில் சுஷ்மிதா பட், ஐஸ்வர்யா ராஜேஷ், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் வருகிற டிசம்பர் 24ம் தேதி அன்று வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !