உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மோகன்லாலின் புகழ்பெற்ற வசனத்தை சஞ்சு சாம்சனுக்கு அறிவுரையாக கூறிய சச்சின் டெண்டுல்கர்

மோகன்லாலின் புகழ்பெற்ற வசனத்தை சஞ்சு சாம்சனுக்கு அறிவுரையாக கூறிய சச்சின் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் அணியிலும் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியிலும் இளம் வீரராக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன். சினிமாவிலும் கூட ஒன்று இரண்டு படங்களில் கெஸ்ட் ரோல்களில் நடித்துள்ளார். இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனுமான சச்சின் டெண்டுல்கரின் அன்பிற்கு பாத்திரமான நபராகவும் இவர் இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் சோசியல் மீடியாவில் சச்சின் டெண்டுல்கர் உரையாடியபோது அவரிடம் கடினமான காலகட்டங்களில் சஞ்சு சம்சனுக்கு என்ன வழிகாட்டுதல்களை நீங்கள் வழங்கினீர்கள் என்று கேட்கப்பட்டது.

அதற்கு சச்சின் டெண்டுல்கர் மோகன்லாலின் நரசிம்மம் படத்தில் அவர் பேசும் புகழ் பெற்ற வசனமான 'நீ போ மோனே தினேஷா' என்கிற வசனத்தை குறிப்பிட்டு சஞ்சுவிடம் நான் என்ன சொன்னேன் என்பதை அவரே உங்களுக்கு சொல்வார் என்று ஜாலியாக பதில் அளித்தார். இந்த பதிவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து கொண்ட கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் இதன் உண்மையான அர்த்தத்தை நமது லாளேட்டனே (மோகன்லால்) சொன்னால் சரியாக இருக்கும் என்று கூறியிருந்தார். இவர்களின் பதிவை பார்த்த மோகன்லால் இதுகுறித்து விரிவான ஜாலியான பதில் ஒன்றை குறிப்பிட்டுள்ளார்.

மோகன்லால் வெளியிட்டுள்ள பதிவில், “மோனே சஞ்சு.. சச்சின் டெண்டுல்கர் ஒரு சிக்சர் அடிக்கும் போது நீ போ மோனே தினேஷா என்பது பந்து வீச்சாளர்களுக்கு சொல்லப்படும் செய்தி ஆகும். அதாவது போய் அடுத்த பந்தை வீசி பார் என்று அர்த்தம். உன்னுடைய பேட்டும் இப்போது அதே செய்தியைத்தான் சொல்கிறது. அதை தொடர்ந்து செய். அடுத்த பந்துவீச்சாளர் உனக்காக காத்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறியுள்ளார் மோகன்லால். இவர்கள் மூவரின் இந்த சுவாரசியமான பதிவுகள் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !