டைம் லூப் கான்செப்ட்டில் உருவாகும் சந்தானத்தின் ‛அதிசய பிறவி'
ADDED : 7 hours ago
நடிகர் சந்தானம் கைவசம் தற்போது லவ் பைட் மற்றும் அதிசய பிறவி ஆகிய படங்கள் உள்ளன. இதில் லவ் பைட் ஜோம்பி வகை கதையாக உருவாகி வருகிறது. செல்வின் ராஜ் சேவியர் இயக்கி உள்ளார். அதிசய பிறவி படத்தை அறிமுக இயக்குனர் சுதாமன் கிருஷ்ணா இயக்கி உள்ளார். பேண்டஸி படமான இது டைம் லூப் கான்செப்ட்டில் உருவாகிறது. ஆனாலும் முழுக்க முழுக்க டைம் லூப் கான்செப்ட் மாட்டுமே அல்லாமல் அதில் வேறு ஒரு புது விஷயம் கலந்திருக்கிறது என்று கூறியுள்ளார் சந்தானம்.
இந்த படத்தின் கதைக்கு மிகப் பொருத்தமாக இருந்ததால் தான் ரஜினிகாந்தின் நடிப்பில் 1990 ல் வெளியான அதிசய பிறவி படத்தின் டைட்டிலை தாங்கள் கேட்டு பெற்றதாகவும் கூறியுள்ளார் சந்தானம். இதற்கு முன்பு இப்படி டைம் லூப் கான்செப்டில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.