உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜெயிலர் 2'-வில் கண்டுகொள்ளப்படாமல் போனதில் வருத்தத்தில் அன்னா ராஜன்

'ஜெயிலர் 2'-வில் கண்டுகொள்ளப்படாமல் போனதில் வருத்தத்தில் அன்னா ராஜன்


சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் நடித்த பல கதாபாத்திரங்கள் இப்போதும் ரசிகர்களிடம் அடிக்கடி பேசப்பட்டு வருகின்றன. சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் கூட ரசிகர்களால் சிலாகித்து பேசப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக இதில் மலையாளத்தை சேர்ந்த வித்யா பாலன், மிர்னா மேனன், பூர்ணா, அன்னா ராஜன் உள்ளிட்ட நடிகைகள் நடித்திருந்தனர்.

இதில் மிர்னா ரஜினியின் மருமகளாக ஏற்கனவே ரசிகர்களிடம் ரீச் ஆனவர். நடிகை பூர்ணா, 'அல்ல பெலேலோ' பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் ரசிகர்களையும் தியேட்டர்களில் உற்சாகமாக ஆட வைத்தார். இது பல ரீல்ஸ் வீடியோக்களாக மீடியாவில் வலம் வருகிறது. வித்யா பாலன் பற்றி சொல்லவே தேவையில்லை. அதேசமயம் இந்த படத்தில் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடுவின் மனைவியாக நடித்தவர் அன்னா ரேஷ்மா ராஜன். மலையாளத்தில் 'அங்கமாலி டைரிஸ்' படத்தில் அறிமுகமான இவர், அதன் பிறகு 'ஜிமிக்கி கம்மல்' பாடல் மூலம் புகழ்பெற்றார்.

'ஜெயிலர் 2' படத்தின் மூலம் இன்னும் பெரிய அளவில் பிரபலமாகலாம் என நம்பிக்கையுடன் இருந்த இவருக்கு படத்தில் இரண்டு காட்சிகள் கூட சொல்லிக்கொள்ளும்படியாக அமையவில்லை. குறிப்பாக ரசிகர்கள் மனதில் இவர் நடித்தாரா இல்லையா என்பதே சரியாக பதியவில்லை. அதனால் பூர்ணா, மிர்னா போன்றவர்கள் உற்சாகமாக தங்களது அனுபவங்களை பேட்டி கொடுத்துக்கொண்டிருக்க, அன்னா ராஜன் மட்டும் வருத்தத்தில் இருக்கிறாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !