உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 50வது நாளில் 'மண்டாடி' : படக்குழுவுக்கு பரிசு கொடுப்பாரா சூரி?

50வது நாளில் 'மண்டாடி' : படக்குழுவுக்கு பரிசு கொடுப்பாரா சூரி?


மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, மகிமா நம்பியார் நடித்த 'மண்டாடி' படம் இன்று 50வது நாளை எட்டியுள்ளது. இப்போதும் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்தின் மொத்த வசூல் 180 கோடியை தாண்டி நிலையில் படம் பெரிய வெற்றிபடமாக கருதப்படுகிறது.

'விடுதலை, விடுதலை 2' படத்தை விட இந்த படத்தில் பெரிய லாபத்தை, படத்தை தயாரித்த ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் பெற்றுள்ளதாக தகவல். சூரியின் சினிமா வாழ்க்கையிலும் இந்த படம் மைல்கல். தமிழில் காமெடி நடிகர் ஒரு கதைநாயனாக நடித்த படங்களில் இதுதான் அதிக வசூல். சில வாரங்களுக்கு முன்பு படத்தின் வெற்றியை படக்குழு கொண்டாடிவிட்டாலும், 50வது நாளை விரைவில் கொண்டாடுவார்கள்.

தீபாவளிக்குபின் அது நடக்கும் என்று கூறப்படுகிறது. அப்போது இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவுக்கு ஹீரோ பரிசு கொடுப்பார். சில சர்ப்ரைஸ் கொடுப்பார் என்று கூறப்படுகிறது. இப்போது 'இன்று நேற்று நாளை' பட ரவிக்குமார் இயக்கும் படத்தில் கதைநாயனாக நடித்து வருகிறார் சூரி. இயக்குனர் மதிமாறன் அடுத்த படத்தை இன்னும் கமிட் பண்ணவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !