டிவியில் 2026 தீபாவளி திரைப்படங்கள் என்ன
தமிழக மக்களுக்கு தீபாவளி என்றாலே கங்கா ஸ்நானம், சாமி வழிபாடு, பட்டாசு, பலகாரம், இனிப்பு, புத்தாடை இவற்றோடு வருவது தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள். சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சிறப்பு பட்டிமன்றங்கள், நடிகர் நடிகைகள் கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சிகள் இவற்றோடு புத்தம் புதிய திரைப்படங்கள்.
தற்போது ஓடிடி தளங்கள் வந்து விட்டாலும் அதனை 20 சதவிகித மக்களே பயன்படுத்துகிறார்கள். மீதுமுள்ள 80 சதவிகித மக்கள் தொலைக்காட்சியைத்தான் நம்புகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று (நவம்பர் 8) புத்தம் புதிய படங்கள் பல திரையிடப்படுகிறது.
சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்', விஜய்யின் 'ஜனநாயகன்', லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள 'டிசி' உள்ளிட்ட திரைப்படங்கள் இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு ஒளிபரப்பில் இடம்பெற உள்ளது. மற்ற படங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும்.