சாய் பல்லவி : ஒரு படத்தில் 'அமைதி', மற்றொரு படத்தில் 'அதிரடி'
தமிழ் சினிமாவில் பிரபலமாவதற்கு முன்பே மலையாளம், தெலுங்கு என பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. ஹிந்தியிலும் நடிக்கச் சென்றவருக்கு அற்புதமான வாய்ப்பாக 'ராமாயணா' படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அக்கதாபாத்திரத்தில் அவர் எப்படி நடிப்பார் என்ற சந்தேகம் பாலிவுட்டில் இருந்தது. ஆனால், படத்தின் டீசர், டிரைலர் வெளியான பிறகு அந்த சந்தேகம் தீர்ந்தது.
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தில் அமைதியான, சாந்தமான சீதா கதாபாத்திரத்தில் சாய் பல்லவியைப் பார்க்க உள்ளோம். அதற்கடுத்த இரண்டு வாரங்களில் வெளியாக உள்ள 'ஓம்' படத்தில் அதிரடியான ஐபிஎஸ் அதிகாரியாக அவரைப் பார்க்கப் போகிறோம்.
சாய் பல்லவியின் கதாபாத்திரம் குறித்து நேற்று வெளியான 'ஓம்' படத்தின் வீடியோ முன்னோட்டத்தில் அவரது நித்யா ரெட்டி கதாபாத்திரம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மறுபக்கம் அக்கதாபாத்திரத்தில் அவர் பொருத்தமாக இருப்பாரா என்ற சந்தேகமும் சிலருக்கு எழுந்துள்ளது.
எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் சாய் பல்லவிக்கு அடுத்த மாதம் 'சீதா, நித்யா' இரண்டு கதாபாத்திரங்களும் பேர் சொல்லும் விதமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் உள்ளது.