உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சித்தி இத்னானி படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லை: தயாரிப்பாளர் கண்ணீர்

சித்தி இத்னானி படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லை: தயாரிப்பாளர் கண்ணீர்


சித்தி இத்னானி நாயகியாக நடித்துள்ள படம் 'டிரோன்ஸ்'. இதில் அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி உள்பட பலரும் நடித்துள்ளனர். இந்தப்படத்தை ஜி.எம்.மோர்கன் பிலிம்ஸ் தயாரிப்பில் ராகவ் மிர்தாத் இயக்கியிருக்கிறார். 'ஜெயிலர்-2' திரைப்படம் வெளியான மறுநாள் 'டிரோன்ஸ்' படம் வெளியானது.

ஜெயிலர் படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் எங்கள் படத்தை பார்க்க வருவார்கள் என்று நம்பி திரையிட்டோம். ஆனால் எங்களுக்கு தியேட்டரே தராமல் விட்டு விட்டார்கள் என்று தயாரிப்பாளர் ஜி.எம்.மோர்கன் கண்ணீருடன் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது “ஒரு பெரிய படம் வரும்போது சின்னப் படங்கள் வரக்கூடாதா? ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இந்தப் படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறோம் . நிச்சயமாகத் 'ஜெயிலர் -2' படத்திற்கு டிக்கெட் ஹவுஸ்புல் ஆகும். டிக்கெட் கிடைக்காமல் போகும். அப்போது எங்கள் படத்திற்கு வருவார்கள் என்று நினைத்துதான் படத்தை வெளியிட்டோம்.

படம் நன்றாக இருந்தால் மக்கள் அங்கீகரிப்பார்கள் என்று நினைத்தோம். படம் நன்றாக இருக்கிறது. ஆனால் எங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை. நல்ல படத்தை எடுத்துவிட்டு தியேட்டர் உரிமையாளர்களிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறோம். அவ்வளவு பணம் போட்டு படத்தை எடுத்திருக்கிறோம். தியேட்டர் கிடைத்தால் தான் மக்கள் படத்தை அங்கீகரித்து அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வார்கள். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !