உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: ஆனந்த் பாபு இரண்டு வேடங்களில் நடித்த படம்

பிளாஷ்பேக்: ஆனந்த் பாபு இரண்டு வேடங்களில் நடித்த படம்


பெரிய ஹீரோக்கள்தான் இரண்டு வேடங்களில் நடிக்க வேண்டுமா என்ன? பிசியாக இருந்த காலத்திலும் ஆனந்த் பாபு 3வது வரிசை நடிகராகத்தான் இருந்தார். அவர் இரண்டு வேடங்களில் நடித்த படம் 'ரெண்டு பொண்டாட்டி காவல்காரன்'. ரேலங்கி நரசிம்மராவ் என்ற தெலுங்கு இயக்குனர் இயக்கினார். ஆனந்த் பாபுவுடன் ரோகினி, வைதேகி, தேவிபிரியா, ஜனகராஜ், செந்தில், ஒய்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்தனர்.

நேர்மையான கான்ஸ்டபிளாக இருக்கும் ஆனந்த் பாபு பல ஊர்களுக்கு அடிக்கடி பணிமாறுதல் பெறுகிறவர். அப்படி இரண்டு ஊர்களில் பணியாற்றும்போது ரோகினியையும், வைதேகியையும் திருமணம் செய்து கொள்கிறார். ஒருவருக்கு தெரியாமல் மற்றவரோடு வாழ்ந்து சமாளிக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரையும் சமாளிக்க முடியாமல் போலீஸ் வேலையை விட்டு விட்டு திருடனாகிறார்.

இன்னொரு ஆனந்த்பாபு முதல் ஆனந்த்பாபு விட்ட போலீஸ் வேலையை ஆள்மாறாட்டம் செய்து வாங்கி விடுகிறார். இப்போது இவரும் ரோகினியையும், வைதேகியையும் சமாளிக்க வேண்டும். அவரது காதலியான தேவிபிரியாவையும் சமாளிக்க வேண்டும்.

இப்படி லாஜிக் இல்லாத கதையாக இருந்தாலும் நல்லதொரு காமெடி படமாக அடையாளம் பெற்றது. இந்த படத்தை இயக்கிய நரசிம்மராவ் தான் தெலுங்கில் இயக்கிய 'இதரு பெல்லல்லா முடுல்லா போலீஸ்' என்ற படத்தையே ரீமேக் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

KayD, Mississauga
2026-10-27 16:30:41

அந்த காலத்திலே இவர் டான்ஸ் நல்ல இருக்கும் . ஆனால் ஒரு வேடத்தில கூட ஒழுங்கா நடிக்க வராது இதில் ரெண்டு வேடமா .