உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆபாச ஏஐ வீடியோ : அருவருப்பான செயல் என நடிகை சுனைனா கண்டனம்

ஆபாச ஏஐ வீடியோ : அருவருப்பான செயல் என நடிகை சுனைனா கண்டனம்

காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வம்சம், சமர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சுனைனா. தமிழ் தாண்டி தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ளார். இவரது போலியான ஆபாச வீடியோவை வலைதளங்களில் யாரோ பரப்பி விட்டுள்ளனர். இதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்... ‛‛எனது முகத்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாக மாற்றி வீடியோ உருவாக்கி, சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் பரப்பி வருவது எனது கவனத்துக்கு வந்துள்ளது. இந்தச் செயல் மிகவும் அருவருப்பானது, கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்கள் எனது கண்ணியம், தனியுரிமை மற்றும் அடையாளத்தை மீறும் செயலாகும். இது பாலியல் துன்புறுத்தலாகவும், அவதூறாகவும் கருதப்படுவதுடன், இந்தியச் சட்டப்படி குற்றமாகும்.

இந்த வீடியோவை உருவாக்கியவர்கள், வெளியிட்டவர்கள் மற்றும் பரப்பியவர்கள் மீது எவ்வித முன்னறிவிப்பும் இன்றி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வேன். இந்த வீடியோவைப் பகிர்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே இந்த இதுபோன்ற வீடியோவை உருவாக்குவதையும், பதிவேற்றுவதையும், பகிர்வதையும் உடனடியாக நிறுத்த வேண்டும். ஏற்கெனவே பதிவிட்டவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தளங்கள் மற்றும் சாதனங்களில் இருந்து அதை நீக்க வேண்டும்.

எனது நலன் விரும்பிகள், பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் இந்த வீடியோவைப் பகிர வேண்டாம் என்றும், எங்கு காணப்பட்டாலும் புகார் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !