பிரபுதேவா, சிம்ரன் நடிக்கும் ‛கமல் ஸ்ரீதேவி'
ஜீயோன் பிலிம்ஸ் மற்றும் எம்ஆர்பி நிறுவனம் தயாரிப்பில் சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு ‛கமல் ஸ்ரீதேவி' என பெயரிட்டுள்ளனர். இதில் பிரபுதேவா, சிம்ரன் முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். இன்னொரு முக்கிய வேடத்தில் மிதுன் ஜெய்சங்கர், ஸ்மேகா மணிமேகலை நடிக்கின்றனர். கிருஷ்ணானந்த் கொட்டாரப்பட்டு இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
குடும்பத்துடன் இணைந்து ரசிக்கும் வகையில் மனதை வருடும் வித்தியாசமான காதல் கதையாக 'கமல் ஸ்ரீதேவி' உருவாகிறது. மூணாறு மற்றும் சென்னையில் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நிறைவடைந்து, இப்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடக்கிறது. இந்தாண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதில் தாமதமாகும் பட்சத்தில் அடுத்தாண்டு காதலர் தினத்தையொட்டி படம் வெளியாக வாய்ப்புள்ளது.
பிரபுதேவா, சிம்ரன் இருவரும் ஏற்கனவே ‛விஐபி, டைம்' போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர்கள் இணைந்து நடித்துள்ளனர்.