செப் தாமு உடல் தகனம் : கண்ணீருடன் பிரியாவிடை அளித்த பிரபலங்கள், ரசிகர்கள்
பிரபல சமையல் கலைஞர், செப் தாமு (72) உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று(அக்., 25) காலமானார். தாமோதரன் எனும் இயற்பெயர் கொண்ட தாமு, சமையல் கலையில் கைதேர்ந்தவர். இந்தியா முழுக்க பல்வேறு ஸ்டார் ஓட்டல்களில் பணியாற்றி உள்ளார். 2010ம் ஆண்டில் தொடர்ந்து 24 மணிநேரம் 30 நிமிடங்கள் 12 வினாடிகளில் 617 விதமான உணவு வகைகளை சமைத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். 2004-ல் சென்னை பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட உணவக மேலாண்மை மற்றும் சமையல் கலைத் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்திய சமையல் கலைஞர் என்ற பெருமையையும் பெற்றார். பத்மஸ்ரீ விருதும் வென்றுள்ளார்.