உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நானியின் 'தி பாரடைஸ்' நெட்பிளிக்ஸில் 5 மொழிகளில் வெளியானது!

நானியின் 'தி பாரடைஸ்' நெட்பிளிக்ஸில் 5 மொழிகளில் வெளியானது!


நானியின் நடிப்பில் வெளியான 'தி பாரடைஸ்' படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் படம் வெளியானதும், நானியின் ரசிகர்களையும் இதர சினிமா பிரியர்களையும் திருப்திப்படுத்தத் தவறிவிட்டது. இப்படி ஒரு படத்தைக் கொடுக்க இத்தனை வருடங்களை எடுத்துக்கொண்டதற்காக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலாவை பலரும் விமர்சித்தனர்.

தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் இப்படத்தை தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியிட்டுள்ளது. இப்படத்தில் அதிக அளவில் விமர்சிக்கப்பட்ட தூமாவதி பாடல் வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளதுடன், நானியின் தாயார் இடம்பெறும் சில காட்சிகளும், நானி சம்பந்தப்பட்ட சில பகுதிகளும் நீக்கப்பட்டுள்ளன. வீட்டுப் பார்வையாளர்கள் இப்படத்தை எவ்வாறு வரவேற்கிறார்கள் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்படத்தில் கயாடு லோஹர் நாயகியாக நடிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !