ருக்மணி வசந்த் நடிக்கும் புதிய படம் அறிவிப்பு
ADDED : 1 days ago
டாக்சிக் படத்திற்கு பின் ருக்மணி வசந்த், தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் டிராகன் படத்தில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் மற்றொரு புதிய திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கும் படத்தில் இணைந்துள்ளார்.
இதில் தேவ் ராம்நாத் மற்றும் விநாயக் வைத்யநாதன் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கிறார்கள். படக்குழு வெளியிட்டுள்ள காணொளியில் தாரா என்ற கதாபாத்திரத்தில் ருக்மணி வசந்த் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். ருக்மணியின் கதாபாத்திரத்தை நகைச்சுவையுடன் அறிமுகப்படுத்தி உள்ளனர். விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இப்படம் தயாராகிறது.