'ஜெயிலர் 2' பாடல் புகழ் நடிகருடன் இணைந்து நடிக்கும் பரத்
ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் - டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் எம் குரு இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிகர் பரத் மற்றும் மலையாளத் திரையுலகில் இயல்பான நடிப்பாலும் நகைச்சுவையாலும் தனி முத்திரை பதித்த நடிகரும் இயக்குநருமான ராஜேஷ் மாதவன் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தின் பூஜை சிம்பிளாக நடந்தது. நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வுகள், சென்டிமென்ட்,வீடு என அனைத்து அம்சங்களும் நிறைந்த பேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகிறது.
'மகேஷிண்டே பிரதிகாரம்', 'நனா தான் கேஸ் கொடு' உள்ளிட்ட மலையாளப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ராஜேஷ் மாதவன், 'ஜெயிலர் 2' படத்தின் 'அலா பொலேலோ' பாடலில் ஆடி தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றவர்.
தமிழில் 'புல்லட்' படத்தில் நடித்த சிவேஷ்தா ராஜ் (வைஷாலி ராஜ்), 'யூத்' படத்தின் மூலம் கவனம் பெற்ற மீனாட்சி தினேஷ் மற்றும் 'மார்கழி திங்கள்', 'திரௌபதி 2' படங்களில் நடித்த ரக்ஷனா இந்துசூடன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
முனீஷ்காந்த், குணச்சித்திர நடிகை சுஜிதா, கட்டெறும்பு ஸ்டாலின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கேரளாவின் ஆலப்புழா பகுதிகளில் மொத்தம் 45 நாட்கள் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் தலைப்பு அறிவிக்கப்பட உள்ளது.