தயாரிப்பாளர் எல்.கே.சுதீஷ் மகளுக்கு டும்டும்: மாப்பிள்ளை யார் தெரியுமா?
தேமுதிகவின் பொருளாளரும், ராஜ்சபா எம்.பி.,யும், திரைப்பட தயாரிப்பாளருமான எல்.கே.சுதீஷ் - பூர்ண ஜோதி சுதீஷ் தம்பதிகளின் மூத்த மகள் ஜானு ஸ்ரீ சுதீஷ்க்கு நவம்பர் 22ல் சென்னையில் திருமணம் நடக்கிறது.
ஓசூரை சேர்ந்த தொழிலதிபர் துட்டுகுறி ரவிக்குமார் மற்றும் ராதா ரவிக்குமார் ஆகியோரின் மகனான அகில் ரவிக்குமாரை மணக்கிறார் ஜானு. நவம்பர் 22ம் தேதி காலை 8.30 மணி முதல் 10 மணி வரை சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடைபெற உள்ளது.
நவம்பர் 21ம் நாள் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் மணமக்களின் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. மணமகள் ஜானு டாக்டர். எம்பிபிஎஸ், எம்எஸ் படித்தவர். மணமகன் அகில் ரவிக்குமார் பெங்களூரில் டி ஆர் கே குரூப் ஆப் கம்பெனிஸ் என்ற பெயரில் கட்டட கட்டுமான தொழில் செய்து வருகிறார். லண்டனில் படித்தவர். இந்த திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை இரு குடும்பத்தினரும் முன் நின்று செய்து வருகிறார்கள்.