உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழ் ‛டைட்டானிக்' 7 ஆண்டுகள் ஆனாலும் இப்போதும் ரசிகர்களுக்கு பிடிக்கும் : கலையரசன்

தமிழ் ‛டைட்டானிக்' 7 ஆண்டுகள் ஆனாலும் இப்போதும் ரசிகர்களுக்கு பிடிக்கும் : கலையரசன்

கலையரசன் நாயகனாவும், ஆனந்தி நாயகியாகவும் நடித்த படம் டைட்டானிக் : காதலும் கவுந்து போகும். எம்.ஜானகிராமன் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படத்தில் ஆஸ்னா ஜவேரி, ராகவ் விஜய், காளி வெங்கட், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்திருந்தார், பல்லு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பே தயாராகிவிட்ட இந்தப் படம் 4 முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் வருகிற 16ம் தேதி வெளிவருதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'கவுந்து போகும்' என்ற நெகட்டிவ் டைட்டில் இருப்பதால்தான் வெளியாகவில்லை என்ற பலரும் கருத்து சொல்ல தற்போது வெறும் 'டைட்டானிக்' என்ற பெயரிலேயே வெளியாக இருக்கிறது.

இதுகுறித்து கலையரசன் கூறியிருப்பதாவது: 'டைட்டானிக்' ஒரு முழுமையான ரொமான்ட்டிக் - காமெடி திரைப்படம். பள்ளிப்பருவம், கல்லூரிப் பருவம், ஐடி வேலை என வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் நடக்கும் காதலைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப் பட்டிருக்கிறது. சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பே தயாரான படம் இது. அப்போதே வெளியாகியிருந்தால், இந்த நேரம் எனக்கு இது போன்ற காதல் கதைகள் நிறைய வந்திருக்கும். தயாரிப்புச் சிக்கல்களால் தாமதமானாலும், இயக்குநர் ஜானகி அண்ணனுக்காகவே இந்தப் படத்தை நான்காவது முறையாக விளம்பரம் செய்து வருகிறேன். படம் இப்போது பார்த்தாலும் மிகவும் ஃபிரெஷ்ஷாக இருக்கிறது. நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடிக்கும். என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !