விஜய் சந்திப்பை தவிர்த்தாரா பவன் கல்யாண்?
சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து ஆந்திர மாநில துணை முதல்வராக இருப்பவர் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண். ஆனால், அவரைப் போல துணை முதல்வராக இல்லாமல், கூட்டணியிலும் இல்லாமல் தனியாக நின்று வெற்றி பெற்று தமிழக முதல்வர் ஆக இருப்பவர் நடிகர் விஜய்.
விஜயவாடாவில் நடைபெற்று வரும் தசரா விழாவான 'விஜயவாடா உத்சவ்' நிகழ்ச்சியில் நேற்று தமிழக முதல்வர் விஜய், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் கலந்து கொண்டார்.
கடந்த வாரம் இது பற்றிய தகவல் வெளியான போது ஒரே மேடையில் விஜய், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பேசலாம் என்று சொன்னார்கள். இருவரது ரசிகர்களும் ஒரே மேடையில் இரண்டு தலைவர்களும் இருப்பதைப் பார்க்க ஆர்வமாக இருந்தார்கள். ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டார் பவன் கல்யாண்.
தேவையற்ற விவாதங்களை இது ஏற்படுத்த வேண்டாம் என பவன் கல்யாண் நினைத்திருக்கலாம் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம், அவர் அடுத்து நடைபெற உள்ள ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனையில் இருந்ததாகவும் சொல்கிறார்கள்.
சமீபத்தில் லண்டனில் சினிமாவில் தன்னுடைய முன்னாள் போட்டியாளரான அஜித்தை விஜய் சந்தித்தது சினிமா உலகிலும், அரசியல் உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அஜித்தின் தீவிர ரசிகர்கள் அதை விரும்பவில்லை என்பதை சமூக வலைத்தள கமெண்ட்டுகள் வெளிப்படுத்தின.
அதைக் கூட பவன் கல்யாண் தரப்பு ஆலோசித்திருக்கலாம் என்றும் தெரிவிக்கிறார்கள். விஜய்யைப் பார்க்க நேற்று கூடிய கூட்டமும் ஆந்திர அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்.