கிராமி விருது போட்டியில் 'துரந்தர் 2'
கடந்த ஆண்டு டிசம்பரிலும், இந்த ஆண்டின் மார்ச்சிலும் வெளியான துரந்தர், மற்றும் துரந்தர் 2 படங்கள் இந்திய அளவில் பெரும் வசூல் சாதனை படைத்தது. 2 பாகங்களும் இணைந்து 3 ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு ஷஷ்வத் சச்தேவ் இசையமைத்திருந்தார். பாடல்கள், பின்னணி இசை ஆகியவையும் பிரபலமானது.
இந்த நிலையில் சர்வதேச இசை உலகின் உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருதுகள் போட்டியில் துரந்தர் 2வும் கலந்து கொள்ள இருக்கிறது. இவ்விருதுகளை அமெரிக்கா, ஆப்பிரிக்கா நாட்டினர்களே அதிகமாக பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான பி62 ஸ்டூடியோஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “கிராமி விருதுக்கான பரிசீலனையில் 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' அனைத்து விதமான அன்புக்கும் நன்றி” எனக் கூறியுள்ளது. சிறந்த பாடல் வரிகள், ஆசிய அளவிலான பாப், குளோபல் இசை, ராப், பாப், எலெக்ட்ராட்னிக் மியூசிக் என 9 பிரிவுகளில் துரந்தர் போட்டியிடுகிறது.