ஜெயிலருக்கு ஆந்திர அரசு சலுகை
ADDED : 1 days ago
ரஜினி நடித்த 'ஜெயிலர்' படத்தின் 2ம் பாகம் வருகிற 15ம் தேதி வெளிவருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். அனிருத் இசைஅமைத்துள்ள இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.
இந்த படம் வெளியான நாளில் இருந்து அடுத்து வரும் 7 நாட்களுக்கு படத்தின் டிக்கெட் கட்டணத்தை வழக்கத்தை விட அதிமாக விதித்துக்கொள்ள ஆந்திர மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஒற்றைத் திரையரங்குகளில் ஒரு டிக்கெக்டுக்கு 50 ரூபாயும், பல திரைகளைக் கொண்ட மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் 75 ரூபாயும் கூடுதலாக வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலும் இதுபோன்று டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிக்கப்படுமா?, சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிய வரும்.