உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சல்மான்கானின் 'மாத்ருபூமி' விரைவில் திரைக்கு வருகிறதா?

சல்மான்கானின் 'மாத்ருபூமி' விரைவில் திரைக்கு வருகிறதா?


ஹிந்தியில் அபூர்வா லக்கியா இயக்கியுள்ள பிரமாண்ட படம் 'மாத்ருபூமி: மே வார் ரெஸ்ட் இன் பீஸ்'. சல்மான்கான் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் சித்ராங்கதா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா- சீனா இடையே நடந்த மோதலை மையமாக கொண்ட கதையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஆரம்பத்தில் 'தி பேட்டில் ஆப் கல்வான்' எனப் பெயரிடப்பட்டிருந்தது. ஆனால், மத்திய அரசாங்கத்தின் வலியுறுத்தல் காரணமாக இதன் தலைப்பும், சில முக்கியமான காட்சிகளும் மாற்றியமைக்கப்பட்டன.

இந்நிலையில், இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதாகவும், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் அடுத்த வாரம் இப்படத்தைப் பார்வையிட உள்ளதாகவும் சில தினங்களாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஆனால், இந்த செய்திகள் உண்மையல்ல என்றும், படத்தின் தணிக்கை திரையிடல் குறித்து எந்தவொரு புதிய அறிவிப்பும் வெளியாகவில்லை என்றும் பாலிவுட் ஊடகங்கள் தற்போது அதற்கு ஒரு மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளன. சீனா தொடர்பான விவகாரம் காரணமாகவே இப்படம் இன்னும் தடையை எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தயாரிப்பாளர்களின் தொடர் முயற்சிகளுக்கு மத்தியிலும், தணிக்கை வாரியம் இந்த படத்திற்கு எப்போது சான்றிதழ் அளிக்கும் என்பது குறித்து தற்போது எந்தவொரு தெளிவான தகவலும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !