வெங்கடேஷ் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் நிவேதா பெத்துராஜ், டிம்பிள் ஹயாதி!
வெங்கடேஷ் மற்றும் இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கூட்டணியில் உருவாகும் முதல் படமான 'ஆதர்ஷ குடும்பம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் இப்படத்தின் ஒரு பாடலின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படம் அதிகப்படியான அதிரடி காட்சிகளைக் கொண்ட ஒரு குடும்பப்படமாக உருவாக்கப்படுகிறது. குடும்பப் பார்வையாளர்களை முக்கியமாகக் கொண்டு, பொழுதுபோக்கு, ஆக்ஷன் மற்றும் கிளாமர் நிறைந்ததாகக் கதையை இந்த படத்தை இயக்கி வருகிறார் த்ரிவிக்ரம்.
இந்த, ஆதர்ஷ குடும்பம் படத்தில் வெங்கடேஷ் நடுத்தர வர்க்கக் கணவராகவும், ஸ்ரீநிதி ஷெட்டி அவருக்கு மனைவியாகவும் நடிக்கின்றனர். நிவேதா பெத்துராஜ் மற்றும் டிம்பிள் ஹயாதி ஆகியோர் சிறப்பு கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்கள் இருவரும் முக்கியமான காட்சிகளிலும், ஒரு பாடலிலும் தோன்றவுள்ளனர். தற்போது நடைபெற்று வரும் பாடல் படப்பிடிப்பில் இவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த படத்தை அக்டோபர் 2ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.