உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகத்தான காவியத்திற்கு உரிய மரியாதை: 'ராமாயணா' படம் பற்றி இயக்குனர் பேச்சு

மகத்தான காவியத்திற்கு உரிய மரியாதை: 'ராமாயணா' படம் பற்றி இயக்குனர் பேச்சு


இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் 'ராமாயணா'. ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், சன்னி தியோல், ரவி துபே, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், குணால் கபூர் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளி பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்கள். இந்த படம், இந்திய சினிமா வரலாற்றிலேயே இல்லாத வகையில் சுமார் 4,000 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரமாண்டமான விழாவாக நடத்தப்பட்டது. 'பிரதம் சங்கல்ப்' என்ற பெயரில் நடைபெற்ற இந்த விழாவில், 'ராமாயணா' படத்தின் டிரைலர் திரையிடப்பட்டது. டிரைலரை பார்த்த அங்குள்ள ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். ஜூலை 24ல் படத்தின் டிரைலரை யூடியூபில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளனர்.

விழாவில் பேசிய இயக்குநர் நிதேஷ் திவாரி, ''ராமாயணம் உலகின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்று. அதன் பெருமை அது சொல்லும் வாழ்க்கை நெறிமுறைகளில் உள்ளது. அதை உலகளாவிய கதையாக மாற்ற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஏனெனில், ஏற்கனவே அது உலக மக்களிடம் புகழ்பெற்ற காவியம். எனது பொறுப்பு அதை நேர்மையுடனும், உண்மைத்தன்மையுடனும், மரியாதையுடனும் திரையில் கொண்டு வருவதுதான்.

திரைக்கதை, நடிப்பு, இசை, கலை இயக்கம், விஷுவல் எபெக்ட்ஸ் என ஒவ்வொன்றும் இந்த மகத்தான காவியத்திற்கு உரிய மரியாதையை வழங்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இது உருவாக்கப்பட்டது. உலகின் மிகச்சிறந்த கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கதைசொல்லிகளுடன் இணைந்து பணியாற்றியது என் வாழ்நாளில் கிடைத்த பாக்கியம். ராமாயணத்தின் பிரம்மாண்டமான காட்சிகளை மட்டுமல்லாமல், அதன் உணர்வுகள், மனிதாபிமானம் மற்றும் காலத்தால் அழியாத ஆன்மா ஆகியவற்றையும் இந்தத் திரைப்படம் மூலம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் உணர்வார்கள் என்று நான் நம்புகிறேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !