உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 250 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'பவழ மல்லி, முட்ட கலக்கி'

250 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'பவழ மல்லி, முட்ட கலக்கி'

தமிழ் இசை உலகில் இந்த வருடத் துவக்கத்தில் அடுத்தடுத்து வெளியான இரண்டு பாடல்கள் இளம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றன. இரண்டு பாடல்களுமே போட்டி போட்டுக் கொண்டு 50, 100, 150, 200 மில்லியன் பார்வைகளைக் கடந்து தற்போது 250 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளன.

கென் கருணாஸ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் இசையில் கென் கருணாஸ் எழுதி பாடிய பாடல் 'யூத்' படத்தில் இடம் பெற்ற 'முட்ட கலக்கி'.

சாய் அபயங்கரின் இசையில் விவேக் எழுதி சாய் அபயங்கர், ஸ்ருதிஹாசனுடன் இணைந்து பாடி, கயாடு லோஹருடன் இணைந்து நடித்து வெளியான ஆல்பம் பாடல் 'பவழ மல்லி'.

இந்த இரண்டு பாடல்களும் தற்போது 250 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளன. 'பவழ மல்லி' பாடல் கூடுதலாக 10 மில்லியன் பார்வைகளைக் கடந்து 260 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

'முட்ட கலக்கி' பாடல் ஏப்ரல் 13ல் 100 மில்லியன் பார்வைகளையும், 'பவழ மல்லி' பாடல் ஏப்ரல் 18க்கு முன்பாக 100 மில்லியன் பார்வைகளையும் கடந்தன. தற்போது வரையிலும் இரண்டு பாடல்களுமே ஏட்டிக்குப் போட்டியாக அமைந்து பார்வைகளைக் கூட்டி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !