உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குடிசை மறுவாழ்வு ஆணையத்தின் தகவல் தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்த சல்மான் கான்

குடிசை மறுவாழ்வு ஆணையத்தின் தகவல் தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்த சல்மான் கான்


பிரபல நட்சத்திரங்கள் பலரும் பிரம்மாண்ட நகைக்கடைகள், துணிக்கடைகளின் சிறப்பு விழாக்களில் கலந்து கொண்டு சிறப்பித்து வரும் வேளையில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் சற்று வித்தியாசமாக மும்பையில் உள்ள குடிசை மறுவாழ்வு ஆணைய அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு சென்று, அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப மையத்தைத் திறந்து வைத்தார். அது மட்டுமல்லாமல், அந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு வீடுகளின் சாவிகளையும் அவர் வழங்கினார்.

அப்போது செய்தியாளர்கள் அவரிடம் கேள்விகளைக் கேட்க முயன்றபோது, எந்தக் கேள்விகளை வேண்டுமானாலும் கேளுங்கள். ஆனால் தயவுசெய்து அந்த ஒரு கேள்வியை மட்டும் கேட்க வேண்டாம் என்று நகைச்சுவையாகக் கூறினார். அதாவது, சமீபகாலமாக அவருடைய 'மாத்ரு பூமி' படம் சென்சார் சிக்கலில் சிக்கித் தவிப்பதால் அதன் ரிலீஸ் தேதி உறுதியில்லாமல் இருந்து வருகிறது. அது குறித்த கேள்வியைத்தான் கேட்க வேண்டாம் என சூசகமாக சல்மான் கான் குறிப்பிட்டுள்ளார் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !