'தேசிங்கு ராஜா, வெள்ளைக்கார துரை' படங்களை மறு படப்பிடிப்பு நடத்தினேன்! இயக்குனர் எழில்
இயக்குனர் எழில், 'துள்ளாத மனமும் துள்ளும், தீபாவளி, மனம் கொத்தி பறவை, தேசிங்கு ராஜா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர்.
இப்போது எழில் அளித்த பேட்டியில், தேசிங்கு ராஜா, வெள்ளைக்கார துரை ஆகிய படங்களை குறித்து எழில் கூறியதாவது, நான் படத்தொகுப்பு செய்து படத்தை பார்க்கும்போது எனக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால் மறு படப்பிடிப்பு செய்வேன். அதேபோல் தேசிங்கு ராஜா படத்தை படத்தொகுப்பு செய்து பார்த்தபோது எனக்கு திருப்தியாக இல்லை. அதனால் தேசிங்கு ராஜா படத்தின் ஓப்பனிங் காட்சிகளை மாற்றினேன். அதற்காக 5 நாட்கள் மறு படப்பிடிப்பு செய்தேன். அதன் பின்னர் வெள்ளைக்கார துரை படத்திற்கும் இதேபோல் படத்தொகுப்பு செய்து பார்த்தபோது திருப்தியாக இல்லை. படத்தொகுப்பில் பிடிக்காத காட்சிகளை பிரித்து பார்த்தால் வெறும் 1 மணி நேரம் தான் நன்றாக இருந்தது. இதனால் வெள்ளைக்கார துரை படத்தை 24 நாட்கள் திட்டமிட்டு 15 நாட்கள் மறு படப்பிடிப்பு செய்து தான் திரைக்கு கொண்டு வந்தோம். இவ்வாறு எழில் தெரிவித்துள்ளார்.