உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அப்பாவாக நடித்த பாக்யராஜ் : உருகும் இயக்குனர் கணேஷ் கே பாபு

அப்பாவாக நடித்த பாக்யராஜ் : உருகும் இயக்குனர் கணேஷ் கே பாபு

கவின் நடித்த டாடா படத்தை இயக்கியவர் கணேஷ்.கே.பாபு. இவர் கதை வசனம், தயாரிப்பில் இவர் நண்பர் கல்யாண் இயக்கும் படம் டார்க். இதில் அஜய்கார்த்தி, அஞ்சனா, நட்டி உட்பட பலர் நடித்துள்னர். இந்த படத்தில் மறைந்த இயக்குனர் கே.பாக்யராஜ் நடித்துள்ளார்.

அவர் நினைவுகள் குறித்து கணேஷ் கே பாபு பேசியது 'நான் இயக்கிய டாடா படத்தில் பாக்யராஜ் அப்பாவாக நடித்து இருந்தார். நான் ஆர்வக்கோளாறு காரணமாக அவருக்கு பல வசனம் கொடுத்தேன். அப்படி நடிக்கணும், இப்படி நடிக்கணும் என எதிர்பார்த்தேன். அவரோ தனது அனுபவத்தால், அந்த நடிப்பை, வசனத்தை மெருகேற்றினார். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அந்த பட வெற்றிக்கு அவர் நடிப்பும் ஒரு காரணம்.

டார்க் படத்தில் ஹீரோயின் அஞ்சனா அப்பாவாக அவர் வருகிறார். அவரிடம் கதை செல்ல இயக்குனர் கல்யாண் செல்லும்போது, முந்தைய அனுபவத்தில் நீ கதை சொல்லு, மற்றதை அவர் பார்த்துக் கொள்வார் என்றேன். அப்படியே நடந்தது. படப்பிடிப்பில் தனது அனுபவத்தில் கலக்கினார். அவர் டப்பிங்கும் பேசி முடித்துவிட்டார். இன்னமும் படம் பார்க்கவில்லை. அதற்குள் காலமாகிவிட்டார்.

படப்பிடிப்பு சமயத்தில் அவர் செருப்பில் பிரச்னை. கால் வலிக்கிறது என்றார். அந்த சமயத்தில் நான் ஓடி சென்று செருப்பு வாங்கி, என் கையால் போட்டுவிட்டேன். அதை என் பாக்கியமாக கருதுகிறேன். ஜூலை 3ல் படம் ரிலீஸ் ஆகிறது. அவர் மறைவுக்குபின் வரும் முதல் படம் என்பதால் இந்த படத்தை அவருக்கு சமர்பணம் செய்கிறோம். படத்தின் தொடக்கத்திலும் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வாசகம் இருக்கிறது' என்றார்.

மறைந்த பாக்யராஜ் நடிப்பில் கடைசியாக 'டார்க் ஜெயண்ட்' என்ற படம் வந்தது. அதில் சாமியாராக நடித்தார். இரண்டு பட தலைப்பிலும் டார்க் என்ற வார்த்தை அமைந்துள்ளது. இன்னும் அவர் நடித்த சில படங்கள் ரிலீஸ் ஆக தயாராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !