உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கங்கனாவின் குயின்-2 முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு.

கங்கனாவின் குயின்-2 முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு.


பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்பி.,யாக தேர்வு செய்யப்பட்டாலும், இன்னொரு பக்கம் திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்த வருடம் மறைந்த பிரதமர் இந்திராவை மையப்படுத்தி 'எமர்ஜென்சி' என்கிற படம் அவர் நடிப்பில் வெளியானது. இந்த வருடம் செவிலியர் கதாபாத்திரத்தில் அவர் நடித்த 'பாரத் பாக்ய விதாதா' திரைப்படம் கடந்த ஜூன் 12ம் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து 'சர்க்கிள்' மற்றும் 'குயின் 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கங்கனா.

கடந்த 2014ல் கங்கனாவுக்கு மிகப்பெரிய வெற்றியையும் திருப்புமுனையையும் கொடுத்த படம் 'குயின்'. இந்தப் படத்தில் ராணி மெஹ்ரா என்கிற கதாபாத்திரத்தில் கங்கனா நடித்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகமாக 12 வருடங்களுக்குப் பிறகு தற்போது 'குயின் 2' தயாராகி வருகிறது. தற்போது இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இது குறித்த புகைப்படங்களை கங்கனா ரணாவத் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !