உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பெத்தி' படம் பார்க்க ஹைதராபாத் கிளம்பி வந்த ஜப்பானிய ரசிகைகள்

'பெத்தி' படம் பார்க்க ஹைதராபாத் கிளம்பி வந்த ஜப்பானிய ரசிகைகள்


தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் புச்சிபாபு சனா இயக்கத்தில் தற்போது 'பெத்தி' திரைப்படம் தயாராகி உள்ளது. ராம்சரணுக்கு அவர் நடித்த 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் மூலம் உலக அளவில் ரசிகர்கள் நிறைய பேர் கிடைத்துள்ளனர். குறிப்பாக ஜப்பானில் ராம்சரனுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் பெத்தி திரைப்படம் சில தொழில்நுட்ப காரணங்கள் காரணமாக ஜப்பானில் வெளியாகவில்லை. இந்த தகவல் முன்கூட்டியே தெரியவந்ததும் ஏமாற்றம் அடைந்த மசாமி மற்றும் கிரிஸ் என்கிற ஜப்பானிய ராம்சரண் ரசிகைகள் இருவர் உடனடியாக தங்கள் அலுவலகத்திற்கு 5 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு RC16 படம் ரிலீஸ் ஆவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ஹைதராபாத்திற்கு கிளம்பி வந்துள்ளனர்.

தற்போது ஹைதராபாத்தில் இந்த படங்களை தொடர்ந்து பார்த்து ரசித்து வரும் இந்த ரசிகைகள் இருவரும் உள்ளூர் ரசிகர்களுடன் இணைந்து புகைப்படங்களை எடுத்து வருகின்றனர் அவை சோசியல் மீடியாவில் தற்போது வைரல் ஆகி வருகின்றன மீண்டும் தாங்கள் ஜப்பானுக்கு கிளம்புவதற்குள் கிட்டத்தட்ட 10 முறையாவது இந்த படத்தை பார்த்து விடுவோம் என்று இவர்கள் கூறிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !