முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி!
ADDED : 11 hours ago
நடிகர் தனுஷ் , ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் தனுஷின் 55வது படம் உருவாகி வருகிறது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், ஆர் டேக் ஸ்டுடியோஸ் என இரு தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
மலையாள நடிகர் மம்முட்டி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். மற்றும் கதாநாயகிகளாக ஸ்ரீ லீலா, சாய் பல்லவி இணைந்து நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கடப்பா காடுகள் நிறைந்த பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இப்போது இந்த படத்தில் சாய் பல்லவி என்ன கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இதுவரை சாய் பல்லவி தனது திரைப்பயணத்தில் நடிக்காத கதாபாத்திரமான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார் என தெரிவிக்கின்றனர்.