உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்!

'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்!


தமிழில் 'யாமிருக்க பயமே, காட்டேரி, கவலை வேண்டாம்' ஆகிய படங்களை இயக்கியவர் டிகே. இதில் யாமிருக்க பயமே படம் மட்டும் தான் வெற்றி பெற்றது மற்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு டிகே மீண்டும் ஒரு புதிய தமிழ் படத்தை இயக்கவுள்ளார். இந்த படம் பெண் முதன்மை கதாபாத்திரம் கொண்ட படம் என்பதால் நித்யா மேனன் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதற்காக டிகே நித்யா மேனனை சந்தித்து கதை கூறியுள்ளார். இந்த கதை நித்யா மேனனுக்கு பிடித்து போக உடனே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

கூடுதலாக, இந்த படத்தில் நடிப்பதற்காக ஒரு சிறிய தொகையை மட்டும் அட்வான்ஸ் ஆக பெற்று கொண்டுள்ளார். மீதமுள்ள சம்பள பணத்தை இந்த படத்தின் லாபத்தில் பங்காக வாங்கி கொண்டு நடிப்பதாக நித்யா மேனன் முன்வந்து கூறியுள்ளார். இந்த தகவல் திரையுலகத்தை ஆச்சரியப்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !