உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரூ.400 கோடி நஷ்ட ஈடு கேட்டு 'காப்பிரைட்' வழக்கு

ரூ.400 கோடி நஷ்ட ஈடு கேட்டு 'காப்பிரைட்' வழக்கு

டேவிட் தவான் இயக்கத்தில், வருண் தவான், மிருணாள் தாகூர், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தித் திரைப்படம் 'ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை'. ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள 'சுன்னாரி சுன்னாரி' என்ற பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

இந்தப் பாடல் 1999ல் சல்மான் கான், சுஷ்மிதா சென் நடிக்க டேவிட் தவான் இயக்கிய 'பிவி நம்பர் 1' படத்தில் இடம் பெற்ற 'சுன்னாரி சுன்னாரி' பாடலின் ரீமேக்காகத்தான் படத்தில் இடம் பெற்றுள்ளது.

ரீமிக்ஸ் செய்யவும், எந்தவிதமான அனுமதியும், தன்னிடம் பெறாமல் இந்தப் பாடலைப் பயன்படுத்தியுள்ளார்கள் என 'பிவி நம்பர் 1' படத்தின் தயாரிப்பாளரான வாஷு பக்னானி மும்பை உயர் நீதிமன்றத்தில் 400 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஒரு காப்பிரைட் வழக்கிற்கு 400 கோடி கேட்டுள்ளது ஹிந்தித் திரையுலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் வாஷு, “இந்த வழக்கு நீதி மற்றும் நெறிமுறைகள் சார்ந்தது. இது போன்ற சூழலில் உள்ள மற்ற தயாரிப்பாளர்களுக்காகவும் சேர்த்துத்தான் போராடுகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !